காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

ஜேர்மனியில் உள்ள ரம்ஸ்ரேன் விமான படை தளத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அமெரிக்க விமானப்படை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான படை தளத்தை அடைந்ததும், தாயும் சேயும் அண்மையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.