ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக, அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது இரண்டாவது பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் 2026 ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகள் சபையின் 9வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டனியோகுட்டரெஸ்) கடந்த 2017 ஜனவரி 1ம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார்.இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தெரிவு செய்யும் பணிகள் நடந்துவந்தன.
அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது அன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன்படி, இன்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தின் போது ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இணைந்திருங்கள்