தான் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில சமூக ஊடகங்களின் அறிக்கைகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரதமர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக பிரதமரிடம் ‘நெத் நியூஸ்’ விசாரித்ததும், அவர் நலமுடன் இருப்பதாகவும், தனது கடமைகளைச் செய்வதற்காக அலரி மாளிகைக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற கொவிட் ஒழிப்பு குழுக் கூட்டத்தில் தானும் பங்கேற்றதாக பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
இணைந்திருங்கள்