நாட்டின் அடுத்த அரசாங்கத்தையும் அதை வழிநடத்தும் பிரதமரையும் தீர்மானிக்க ஜேர்மனி முழுவதும் உள்ள வாக்காளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் வாக்களித்தனர்.

ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரத்தின் தலைமை ஆபத்தில் உள்ள நிலையில் ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல் இதுவாகும். இந்நிலையில் அடுத்த ஆட்சித் துறைத் தலைவருக்கு கடும் போட்டி நிலவுகிறது.

கருத்துக் கணிப்புகளின்படி மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிம் மற்றும் அதன் சகோதரக் கட்சியான பவேரியன் கிறிஸ்டியன் சமூக ஒன்றியத்தை விடவும் சமூக ஜனநாயகக் கட்சியினர் சற்று முன்னிலையில் உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் இன்று திங்கட்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.