உங்களுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறதா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே அதற்கு காரணமாகும். உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அவசியமானது.
வீட்டின் சமையல் அறையில் இருக்கும் பொருட்களை கொண்டே நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச்செய்துவிடலாம். இதற்கு கருப்பு மிளகு சிறந்த தீர்வாக அமையும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
கருப்பு மிளகு தரும் ஆரோக்கிய நன்மைகள்:
உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு குடல் ஆரோக்கியம் முதன்மையானது. தினமும் மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். செரிமானமும் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் தடுக்கப்படும். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும். செல்கள் சேதமடைவதையும் தடுக்கும். பருவகால நோய் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வழிவகை செய்யும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். வெதுவெதுப்பான நீருடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்த்து பருகி வரலாம். நீர், மிளகு இவை இரண்டும் செரிமானத்தை சீராக்கும். அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். ஒரு மாதத்திலேயே உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம்.
சூடான நீருடன் மிளகு சேர்த்து பருகுவது குடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். நீரிழப்பை தடுக்கவும் உதவும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவதற்கும் துணைபுரியும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் வழிவகுக்கும்.
நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும். ஏனெனில் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒவ்வொரு நாளும் மலச்சிக்கல் பிரச்சினை குறைந்து வருவதை உணரலாம். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதன் மூலம் வயிற்றுக்கும் இதமாக இருக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை பருக ஆரம்பித்தால் உடலில் ‘ஸ்டெமினா’ அளவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஏனென்றால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்துவிடும். அதனால் உடல் ஆற்றலும் அதிகரிக்கும்.
கருப்பு மிளகு வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்கக்கூடியது. சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும், மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கவும் உதவும். கீல்வாதம், மூட்டு வலி, மலச்சிக்கல், சுவாசக்கோளாறு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகுவது நல்லது. அதேவேளையில் அதிகம் பருகினால் குடலில் எரிச்சல் ஏற்படக் கூடும்.
இணைந்திருங்கள்