ஹெச்.எம்.டி. குளபோல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 ஆம் தேதி துவங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் கிரானைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை நோக்கியா எக்ஸ்.ஆர்.20 மாடலில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யு. வழங்கப்படுகிறது.

 நோக்கியா எக்ஸ்.ஆர்.20

இத்துடன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11, 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வாட்டர் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.