லத்தீப் பாரூக்

1917ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி பலஸ்தீனம் பிரிட்டனால் யூதர்களுக்கு
தாரைவார்த்து கொடுக்கப்பட்ட பெல்பர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட 104வது வருட நிறைவை குறிக்கம் தினமாகும். பிரிட்டன் தனக்கிருந்த ஆதிக்க சக்தியை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமான முறையிலும் தார்மிக விழுமியங்களை தவிடு பொடியாக்கியும் பலஸ்தீனம் என்ற பிரதேசத்தை அதுவரை கண்டும் கூட இல்லாத யூதர்களுக்கு பலஸ்தீன மக்களின் பாரம்பரிய தாயக பூமியைத் தாரைவார்த்து கொடுத்தது.

19ம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் பிரிட்டிஷ் பேரரசு முஸ்லிம்களை
பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கு உருக்குலைய வேண்டும் என்று முடிவு கட்டியது.

இதே காலப்பகுதியில் தான் சியோனிஸ யூதர்களும் பலஸ்தீனத்தில் தமது தனி இராஜ்ஜியத்தை நிறுவ திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தனர். அந்த காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் 97 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய அரபு பலஸ்தீனர்களாகவே காணப்பட்டனர்.

அந்தக் காலப்பகுதி மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதி துருக்கிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலப்பகுதியாகும். முஸ்லிம் விரோத சக்திகளுக்கு பெரும் தடையாக இருந்தது இதுதான். அதை நீக்குவதே அவர்களின் பிரதான குறிக்கோள். முதலாவது உலகப் போரில் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது. பிரிட்டிஷ் மற்றும் பிரன்ஸ் என்பனவற்றின் கூட்டுப் படைகளால் துருக்கிப் பேரரசு தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அந்த வாய்ப்பை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர்.

துருக்கி பேரரசின் வீழ்ச்சியை எதிர்ப்பார்த்து காத்திருந்த பிரிட்டிஷ், பிரான்ஸ் படைகள் 1915 நவம்பர் 23 முதல் இரகசிய பேச்சுவார்த்தகளைத் தொடங்கின. இதன் மூலம் அவர்கள் இந்தப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்தப் பேச்சுவார்ததைகளின் முடிவில் உருவானது தான் ளுலமநள – Piஉழவ உடன்படிக்கை.

மத்திய கிழக்கை தமக்கிடையில் கூறுபோடும் இரகசிய பேச்சுக்களில் பிரிட்டிஷ் தரப்பில் தலைமை தாங்கியவர் ஆயசம ளுலமநள என்ற சிரேஷ்ட ராஜதந்திரி பிரான்ஸ் சார்பாக இதற்கு தலைமை தாங்கியவர் அந்த நாட்டின் முக்கிய ராஜதந்திரி குசயnçழளை புநழசபநள-Piஉழவ என்பவர். இவர்கள் இருவரதும் பெயர் கொண்டு தான் இந்த உடன்படிக்கை அழைக்கப்படுகின்றது) ரஷ்யா இதில் இருந்து விலகி இருந்தாலும் பின்னர் பிரிட்டனும் பிரான்ஸ{ம் ரஷ்யாவையும் இணைத்துக் கொண்டு அதன்
சம்மதத்திலேயே இந்த உடன்படிக்கையை செய்து கொண்டன.

1917ல் பிரிட்டனின் அதிகாரத்தின் கீழ் பலஸ்தீனம் கொண்டு வரப்பட்டது. இது பலஸ்தீனப்பகுதிக்குள் தமது சட்ட விரோத கனவு ராஜ்ஜியத்தை அமைத்துக் கொள்ள யூதர்களுக்கு சாதகமாகமாறியது.

இந்த சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக 1917 நவம்பர் 2ல் அப்போதைய பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்பர் அன்றைய சியோனிஸ சமூகத் தலைவர் வோல்டர்

2

ரொத்ஸ்சைல்ட் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் “பிரிட்டிஷ் பேரரசு பலஸ்தீன பூமியில்
யுதர்களுக்கு ஒரு தேசிய தாயகத்தை உருவாக்கும் விடயத்தை சாதகமாக நோக்குகின்றது.

இந்தஇலக்கை அடைந்து கொள்ள பிரிட்டிஷ் அரசு தன்னால் முடிந்த எல்லா சாதக நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பாரிஸ் சமாதான மாநாட்டின் பிரகடனத்தில் பெல்பர் ஒரு குறிப்பையும் எழுதி இருந்தார்.
நான்கு பாரிய சக்திகள்( பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா) சியோனிஸ விடயத்தில்திடசங்கற்பம் பூண்டுள்ளன. சியோனிஸம் என்பது சரியோ பிழையோ, நல்லதோ கெட்டதோ, அது பண்டைய மரபுகளில் ஊடுறுவிய ஒன்றாகும். இன்றைய தேவைகளில், எதிர்கால நம்பிக்கைகளில்.

இது தற்போது அந்த பண்டைய பூமியில் வாழும் 700000 பலஸ்தீன அராபியர்களின் ஆசைகள் மற்றும் தப்பெண்ணங்களைவிட இது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்தக் குறிப்பை எழுதி கையெழுத்திட்டபோது அவர் பிரிட்டனின் வெளியுறவு
அமைச்சரே அல்ல. அன்றைய பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாவது ஜோர்ஜ் மன்னருக்கும் பலஸ்தீனம் மீது எந்த அதிகாரமும் இருக்கவில்லை. இறையான்மை மிக்க பலஸ்தீன பூமியை யூதர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் உரிமை எவருக்கும் இல்லாத நிலையில் எடுக்கப்பட்ட முடிவு தான் இது. இந்த உடன்படிக்கைக்கான பேச்சுக்கள் இடம்பெற்ற போது அராபியர்களுக்கு எதுவும் தெரியவராமல் பிரிட்டன் அவர்களை இருளில் வைத்திருந்தது. ஆனால் யூதர்கள் இதில் பிரதான பங்காளிகளாகப் பங்கேற்றனர்.

ரஷ்ய ஊடகங்களில் இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள்
வெளியான பின்னர்தான் அராபியர்கள் இதுபற்றி அறிந்து கொண்டனர்.
துருக்கிய பேரரசுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் போது அராபியர்கள் சிலரின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக அராபியர்களுக்கு பிரிட்டனின் இராணுவ அதிகாரி வு.நு. லோரன்ஸ் வழங்கிய வாக்குறுதி இதன் மூலம் அப்பட்டமக மீறப்பட்டது. யுத்தம் முடிந்த பின் அராபியர்களுக்கான முழுமையான சுதந்திரம் வழங்கப்படும் என்பதும் அவர்கள் தங்களை தாமே ஆழலாம் என்பதும் தான் அராபியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும்.

அராபியர்கள் பிரிட்டனை நம்பினர் ஆனால் பிரிட்டன் அவர்களுக்கு துரோகம் இழைத்தது. அராபியர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிரியா, பலஸ்தீனம், ஈராக் ஆகிய பகுதிகளில் வன்முறைகளுடன் கூடிய பெரும் கலவரங்களும் வெடித்தன.

பிரிட்டிஷ் பேரரசு எப்போதுமே அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தமது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள அராபியர்களைக் கொண்டு துருக்கிய பேரரசை வீழ்த்தினார்கள்
அதன் பிறகு உலகம் முழுவதும் இருந்து யூதர்களைக் கொண்ட வந்து பலஸ்தீன பூமியில் குடியேற்ற பிரிட்டன் தேiவான உதவிகளையும் ஆதரவையும் வழங்கியது. பலஸ்தீனர்கள் தமது சொந்த பூமியில் இருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தஞ்சம் அடையும் நிலை உருவாக்கப்பட்டது.

பலஸ்தீனத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய யுதுர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. அதேநேரம் பேனாக் கத்தி ஒன்றை வைத்திருந்தமைக்காக பலஸ்தீனர்கள் மின் கம்பங்களில் கட்டப்பட்டு அடித்தும் சுட்டும் கொல்லப்பட்டனர். பலஸ்தீனர்களை தமது சொந்த பூமியில் இருந்து அடித்துத் துரத்திவிட்டு அங்கு யூதர்களை குடியேற்றும் விடயத்தில் யூதர்கள் சுமார்
90 படுகொலைச் சம்பவங்களைப் புரிந்துள்ளனர்.

3
தேவையான அளவு யூதர்களைக் கொண்டு வந்து குவித்ததும் அமெரிக்கா இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்துக் கொண்டது. அங்கு ஏனைய நாடுகளுக்கு லஞ்சம் வழங்கியும், அச்சுறுத்தியும் தான் கொண்டு வந்த இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கும் தீர்மானத்தை 1948ல் அமெரிக்கா சகல சட்டங்களையும், மனித விழுமியங்களையும் விதிமுறைகளையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிக் கொண்டது.

லண்டனில் பலஸ்தீனர்கள் பெல்பர் பிரகடனத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பிரிட்டன் பலஸ்தீன இனஒழிப்பு சம்ஹாரத்துக்கான அடிக்கல்லை நாட்டி 104 வருடங்களின் பின்னரும் பலஸ்தீனப் போராட்ட சக்திகளும், சர்வதேச ஆதரவு அமைப்புக்களும் தொடர்ந்தும் சியோனிஸ காலணித்துவ திட்டங்களுக்கு எதிராகப் போராடிய வண்ணமே உள்ளன.

சியோனிஸ மேலாதிக்கவாத பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்தி வரும் இந்தப் போராட்டங்களால் தொடர்ந்து இடப்பெயர்வுகளையும், பயங்கரவாதத்தையும் இந்த மக்கள் சந்தித்த வண்ணமே உள்ளனர்.

ஐ.நா சாசனத்துக்கு இசைவாகவும் சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை விழுமியங்களுக்கு ஏற்புடைய விதத்திலும் சட்ட ரீதியான எல்லா முறைகளையும் பின்பற்றி பலஸ்தீனர்கள் இன்றும் தமது போராட்டத்தை சகல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றனர்.

4

1920 களின் முற்பகுதியில் தமது தாயக பூமி பறிக்கப்பட்ட அறிவித்தல் பிரகடன்த்தை கேள்வியுற்ற டமஸ்கஸ் நகர மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.

அண்மைக்காலங்களில் இடம்பெற்ற மற்றொரு கடும் எதிர்ப்பு
நஸீம் எனாய்ஸத் என்ற பத்தி எழுத்தாளர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் ‘இஸ்ரேல் அது
உருவாக்கப்பட்டது முதல் ஒரு நாள் ஏன் ஒரு நொடிப் பொழுது கூட பலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் அநீதிகளையும் நிறுத்தியதில்லை. பலஸ்தீனர்களுக்கு எதிரான எல்லாவிதமான மனிதாபிமான விரோத செயல்களையும் அது புரிந்துள்ளனது. புரிந்து கொண்டும் இருக்கின்றது.

கொலைகள், வெளியேற்றம், இடப்பெயர்வு, அழிவுகள் என எல்லாமே இந்த 5
பலஸ்தீன பூமியில் அன்றாடம் அரங்கேற்றப்படுகின்றன. மரங்களை, கற்களை ஏன் பலஸ்தீன மயான பூமிகளைக் கூட அவர்கள் அழிவுகளில் இருந்து விட்டு வைக்கவில்லை. பயங்கரவாதம் அதன் மிகக் கொடிய வடிவத்தில் இங்கே தலைவிரித்தாடுகின்றது.

பெல்பர் பிரகடனம் அரபு மற்றும் முஸ்லிம் உலகில் மட்டுமன்றி நியாயமான சிந்தனை கொண்ட சமாதானத்தை விரும்பும் உலக மக்கள் அனைவர் மத்தியிலும் கவலையை உண்டாக்கிய ஒரு விடயமாகும்.

பலஸ்தீன மக்களின் விடயத்துக்கு நியாயமானதும் விரிவானதுமான ஒரு தீர்வு இன்றி உலகம் அமைதியை எதிர்கொள்ள முடியாது. பலஸ்தீன மக்கள் தமக்குரிய முழுமையான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளாமல், ஜெரூஸலத்தை தலைநகராகக் கொண்ட தமக்கான சுதந்திர தேசத்தை மீண்டும் உருவாக்கிக் கொள்ளாமல், உரிய நட்ட ஈடுகளுடன் அவர்கள் தமது தாயத்துக்கு மீண்டும் திரும்பாத வரைக்கும் இந்த அமைதி சாத்தியமாகப் போவதும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.