பதுளை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐந்து கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல கைதிகளுக்கும் மற்றுமொரு கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே கைகலப்பில் விளைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இணைந்திருங்கள்