அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிக்கும் சகலரையும் வெளியேற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ, நடவடிக்கை எடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபஸ, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை, அண்மையில், இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்திருந்தார்.
அது, அரசாங்கத்தை விமர்சிக்கும் ஆளும் தரப்பினருக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பதற்காகும் என்றும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டு எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடமளிக்கமுடியாது என்று, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவ்வாறான நிலைமையில், அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, அரசாங்கத்தை விமர்சித்தால், அவ்வாறனவர்களின் பதவிகளை பறிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மாத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இணைந்திருங்கள்