விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலம் மற்றும் பெறுமதிசேர் வரி திருத்த சட்டமூலம் இன்று (20) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அது தொடர்பில் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பான விவாதம் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகரால் இன்று அறிவிக்கப்பட்டன.
இணைந்திருங்கள்