ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு,

1. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில்.

2. பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை.

3. கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல்.

4. மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு.

5. ரமேஷ் பத்திரன- கைத்தொழில்.

6. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரம்.

7. அஹமட் நசீர்- சுற்றாடல்.

8. ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகாரம்.

இதற்கு முன்னர் 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது