எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் நோக்கில் பொது போக்குவரத்து துறை விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில்வே தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார் அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.