ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாளை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் முற்பகல் 11 மணிக்கு குறித்த ஊடக சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவசர ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், தெற்கு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்