தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.

அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், தேசிய அரசமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல. இன்று அமைச்சுகளுக்குள் மோதல் இடம்பெறுகின்றது.

எமக்கு தேசிய வேலைத்திட்டமொன்றே அவசியம். அதனை முன்வைப்போம்.” – என்றும் தெரிவித்த மைத்திரி, நல்லாட்சிமீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.