முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், கோட்டை நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் சரணடைந்தார்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹரகம பகுதியில் அமைந்துள்ள நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவர் இவ்வாறு சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதுவரை அவரை கைது செய்வதற்கான கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்ததது. இந்நிலையிலேயே ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சரணடைந்துள்ளார்.