நாட்டில் சுமார் 3,500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளமையினால் சுமார் 2 இலட்சம் பேர் வேலையினை இழந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலையில்,50 சதவீதமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது.

100 ரூபாவாக அதிகரிக்கும் பணிஸ் விலை
பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருமாறு பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

முட்டை, வெண்ணெய், மரக்கறி, தேங்காய் எண்ணெய் போன்ற பேக்கரி பொருட்களை விற்பனை செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலை தொடரும் பட்சத்தில் பணிஸ் ஒன்றின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கும். அதனை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பேக்கரி பொருட்களை விநியோகம் செய்யும் வாகனங்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்