பிரைட் பிளாக் கிரிஸ்டல் மற்றும் டார்க் புளூ ஆகிய மூன்று நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் உள்ளது.
ஜியோனி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜியோனி P50 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள அந்த மாடல் அச்சு அசல் ஐபோன் 13 போன்றே முன்புற தோற்றத்தை கொண்டுள்ளது. பிரைட் பிளாக், கிரிஸ்டல் மற்றும் டார்க் புளூ ஆகிய மூன்று நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
விலையை பொருத்தவரை இதன் 4ஜிபி 10 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 7, 600க்கும், 4ஜிபி 10 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8, 600க்கும், 6ஜிபி 10 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8, 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டூயல் சிம் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
பின்புறத்தில் கேப்சியுல் மாதிரியான கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ஹெச்டி நைட் ஷாட், மேக்ரோ ஷாட் மற்றும் போர்ட்ரேட் பியூட்டி லென்ஸ் ஆகியவை அதில் இடம்பெற்று உள்ளன. இதுதவிர 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை முன்புறத்தில் கொண்டுள்ளது. சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி பேஸ் அன்லாக் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
இணைந்திருங்கள்