இங்கிலாந்து, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. நாணய சுழற்சியில்  வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்  தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 329 ஓட்டம்  எடுத்தது. டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 360 ஓட்டம்  எடுத்தன. பேர்ஸ்டோவ் 162 ஓட்டம் , ஓவர்டோன் 97 ஓட்டம்  எடுத்தனர்.

துஷார், மொஹமது அதிரடி – 4 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திருப்பூர் நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், சவுத்தி 3 விக்கெட்டும், வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 31 ஓட்டம்  பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 105.2 ஓவரில் 326 ஓட்டம் பெற்று ஆட்டம் இழந்து . டொம் லாதம் 76 ஓட்டம் , டேரில் மிட்செல் 56 ஓட்டம்  எடுத்தனர். டாம் பிளெண்டல் 88 ஓட்டம்  எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 3 விக்கெட்டும் அள்ளினர். 296 ஓட்டம்  எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

அலெக்ஸ் லீஸ் 9 ஓட்டம் , கிராளே 25 ஓட்டம்  அவுட்டாகினர். ஒல்லி போப்புடன், ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த நிலையில் ஒல்லி போப் 82 ஓட்டம்  ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் அதிரடியில் மிரட்டினார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் பேர்ஸ்டோவ் பவுண்டரி, சிக்சருமாக விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியில், இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 296 ஓட்டம்  எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 88 ஓட்டம் , பேர்ஸ்டோவ் 44 பந்தில் 71 ஓட்டம்  எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றியது