பறவைகளில் சனி பகவானின் வாகனம் தான் காகம். இந்த காகம் அதிகம் காணப்படும் மிகவும் பொதுவான பறவைகளில் ஒன்றாகும். இந்தியாவில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக தாவரங்கள், மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதில் காகம் எமனின் தூதராக கருதப்படுகிறது. அதோடு என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் காகங்களுக்கு முன்கூட்டியே கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆகவே தான் மக்கள் காகங்கள் நமக்கு உணர்த்துவதற்காக வெளிக்காட்டும் அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது. இப்போது காகம் தொடர்பான சில நல்ல மற்றும் கெட்ட சகுனங்கள் பற்றி காண்போம்.
சகுனம் 1சகுன சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் உங்கள் வீட்டின் பால்கனியில் அமர்ந்து கரைத்தால், உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரவிருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அனைவருமே அறிந்த காகம் தொடர்பான தகவல்களில் ஒன்றாகும்.
சகுனம் 2சகுன சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் மதிய வேளையில் வடக்கு திசையை நோக்கி கரைத்தால், அது நல்லது என்று கருதப்படுகிறது. அதேப்போல் காகம் கிழக்கு திசையை நோக்கி சப்தத்தை எழுப்பினால், அதுவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சகுனம் 3நீங்கள் எங்கேனும் வெளியே சுற்றுலா அல்லது பயணம் செய்ய தயாராகி கிளம்பும் போது, திடீரென்று உங்கள் வீட்டு ஜன்னல் அல்லது பால்கனியில் காகம் வந்து கரைத்தால், நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நன்றாக அமையும் என்று அர்த்தம்.
சகுனம் 4உங்கள் வீட்டு பால்கனியில் காக்கைகள் கூட்டமாக இருந்து கரைத்தால், அது நல்ல அறிகுறி அல்ல. இது உங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக இது உங்கள் குடும்பம் சிக்கலில் சிக்கலாம் அல்லது நீங்கள் ஏதோ நோய்வாய்ப்படலாம் என்று அர்த்தம்.
சகுனம் 5காகம் உங்கள் வீட்டின் தெற்கு திசையில் அமர்ந்து சத்தம் எழுப்பினால், அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. அதுவும் இது உங்கள் முன்னோர்கள் உங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்றும், உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் அர்த்தம்.
சகுனம் 6சகுன சாஸ்திரத்தின் படி, காகம் தண்ணீர் குடிப்பதை பார்ப்பது நல்லது. முக்கியமாக இந்நிகழ்வை கண்டால், பணம் கையில் வந்து சேரும். அதுவும் ஒருவர் முக்கியமான வேலைக்கு வெளியே செல்லும் போது காகம் தண்ணீர் குடிப்பதைக் கண்டால், அந்த வேலையில் நிச்சம் வெற்றி கிடைக்குமாம்.
சகுனம் 7காகம் ஒரு ரொட்டித் துண்டை தூக்கிக் கொண்டு செல்வதை ஒருவர் கண்டால், அது நல்ல சகுனம். அதுவும் இந்நிகழ்வை காண்பவரின் பெரிய ஆசைகள் நிறைவேறும் என்பதற்கான அறிகுறி தான் இது.
சகுனம் 8சகுன சாஸ்திரத்தின் படி, காகமானது ஒருவரின் வாகனம், காலணி அல்லது உடலை தனது சிறகு கொண்டு உரசி சென்றால், மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
இணைந்திருங்கள்