எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக 18,000 தனியார் பஸ்கள் நேற்று முன்தினம் முதல் சேவையில் ஈடுபடவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவிக்கையில், அதிகரித்த எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணத்தை 35 முதல் 47 வீதம் வரை அதிகரிக்க வேண்டும். இதன்படி தற்போது குறைந்தபட்சமாக 32 ரூபாவாக உள்ள கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றார்.