பிரதமர் ரணில் விக்கிரமங்க நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“இன்று முதல் உண்மையிலேயே நானும் போராட்டத்திற்கு என்னை தயார்படுத்திக்கொள்கிறேன். நான் அரசாங்கத்தினுள் வந்து 7 நாட்கள் ஆகிறது. இதில் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க ஆடும் இந்த அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும். ஏனென்றால் டொலர்களைக் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர் நிறுத்துகிறார். நாட்டின் பணப்புழக்கம் குறித்து அவரிடம் எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு எப்படி உணவளிப்பது என்பது பற்றி அவரிடம் எந்த திட்டமும் இல்லை. டொலர்களை எப்படி கொண்டு வருவது என்பது பற்றியும் எந்த திட்டமும் இல்லை. இந்த நேரத்தில் அவர் மக்கள் பிரச்சனைகளை சொல்லிக்கொண்டு திரியாமல் நிதியமைச்சர் என்ற விதத்தில் செயற்பட வேண்டும். உண்மையில் எனக்கு பிரதமர் பதவியில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் பத்து வருட மல்டிபிள் விசா ஒரு மாதத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இன்று ஒரு மாதமாக திறைசேரியில் வைத்துக் கொண்டுள்ளனர். ஏனென்றால் அவருக்கு ஒரு பழக்கம் உள்ளது, டொலர் வருவது என்றால் உடனே திட்டத்தை நிறுத்த வேண்டும்.