நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினாலோ அல்லது அவர் தலைமையிலான அரசாங்கத்தினாலோ தீர்வுகாண முடியாது சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அதோடு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பரந்த தேசிய வேலைத்திட்டம் அவசியம் எனவும் தெரிவித்தார்.
குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் மூலம் நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அதேசமயம் நாட்டில் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை தயாசிறி ஜயசேகர மீண்டும் வலியுறுத்தினார்.
இணைந்திருங்கள்