இன்று பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் காரசாரமான வாத, விவாதங்களுடன் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் ஆரம்பத்தில், ஜனாதிபதி 13ஆம் திகதி பதவி விலகுவதாக வாய்மொழியாகத் தான் தமக்கு அறிவித்துள்ளதாகவும், இதுவரை எழுத்து மூலம் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தனது வீடு எரிக்கப்படுவதற்கு ரவூப் ஹக்கீம் காரணம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்க ரணிலுக்கும், ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

எவ்வாறாயினும்இ பாராளுமன்றத்தை எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூட்டவும், 19ஆம் திகதி வேட்பு மனு கோரவும், மீண்டும் புதன்கிழமை (20ஆம் திகதி) பாராளுமன்றத்தை கூட்டி ஜனாதிபதியை தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.