பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு போராட்டக்காரர்கள் சிலரால் தீக்கு இரையாக்கப்பட்ட நிலையில் பிரதமர் முதல் முறையாக சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சி உறுப்பினர்களிடையே சிறப்பு கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

அதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், 

“சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை. ஆனால் நான் படித்த புத்தகங்களை தீக்கு இரையாக்கியது எண்ணிதான் கவலைக் கொள்கிறேன்.

நான் மூன்று தலைமுறைகளாக சேர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மூன்று அறைகளில் சேமித்து வைத்திருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தகங்கள்தான் நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த வீட்டை அவர் ஏற்கனவே கொழும்புவில் உள்ள ரோயல் கல்லூரிக்கு எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில்தான் இந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.