ரஷ்ய உக்கிரைன் எல்லையில், ரஷ்யா தனது எஸ்- 400 வான் பாதுகாப்பு பொறிமுறையை நிறுத்தி வைத்துள்ளது. 

இதுவே உலகத்தில் உள்ள அதி பாதுகாப்பு பொறி முறை ஆகும். தனது எல்லைக்குள் வரும் எந்த ஒரு ஏவுகணையானாலும் சரி இல்லையே விமானம் ஆனாலும் சரி எஸ் 400 உடனடியாக தனது ஏவுகணைகளை ஏவி, உள்ளே வரும் இலக்கை தாக்க ஆரம்பித்து விடும். 

இதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. தானியங்கியாக எஸ் 400 பொறி முறை செயல்படும். ஆனால் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா உக்கிரைனுக்கு வழங்கிய ஏவுகணைகளை கொண்டு உக்கிரைன் தாக்கியதில். 

அமெரிக்காவின் HIMARS என்ற ஏவுகணை ரஷ்ய பொறி முறையை தாண்டிச் சென்று தாக்கியுள்ளது. இதில், 12 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்துடன் அருகே இருந்த எஸ் 400 பொறி முறையும் சிதைந்துள்ளது. 

இதனூடாக ரஷ்யாவின் தற்பாதுகாப்பு பொறி முறையை உடைத்து கண்ணில் மண் தூவிச் செல்லும் ஏவுகணைகள் தம்மிடம் உள்ளது என்பதனை அமெரிக்கா உலகிற்க்கு காட்டியுள்ளது.