ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வெடிப்புச் சம்பவம் காபூலில் உள்ள கமிட் ஹர்சாய் விமான நிலையத்திற்கு வெளியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களை கொண்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானியர்கள் விமான நிலையத்தின் வாசலில் மக்கள் கூடியிருந்த நிலையில் குறித்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவொரு தற்கொலைத் தாக்குதலாக இருக்குமென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள் உயிரிழப்புக்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவில்லை.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு இடம்பெறலாம் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்