ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்து வெளியேறும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினர் அருகில் ஜனாதிபதி சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் ரணில் விசேட அதிரடிப்படையினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காகவே இறங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடமே அவர் நட்புறவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இணைந்திருங்கள்