ஒடேசா துறைமுகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவின் செயலை காட்டுமிராண்டித்தனம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனின் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் – தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு கையெழுத்திட்டப்பட்டது.

தாக்குதல் குறித்து மொஸ்கோ கருத்து தெரிவிக்கவில்லை, வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான தயாரிப்புகள் இன்னும் நடந்து வருவதாக கெய்வ் தெரிவித்துள்ளது.

ஆனால் சனிக்கிழமையன்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, மாஸ்கோ ஒப்பந்தத்தில் இணைந்து செயற்படும் என்பதை எவ்வாறு நம்ப முடியாது என்பதை இது விளக்குகிறது என்றார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறுவதற்கு முடிந்த அனைத்தையும் செய்வதாக அவர் சபதம் செய்தார்.

உக்ரைன் ஒரு பெரிய தானிய ஏற்றுமதியாளராக உள்ளது, ஆனால் போர் காரணமாக, சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் அதன் துறைமுகங்களில் சிக்கியுள்ளன, ரஷ்ய படைகள் காரணமாக வெளியேற முடியவில்லை. 

இது ஆப்பிரிக்கா முழுவதும் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தின் கீழ், தானிய ஏற்றுமதிகள் போக்குவரத்தில் இருக்கும்போது துறைமுகங்களை குறிவைக்க மாட்டோம் என்று ரஷ்யா ஒப்புக்கொண்டது.

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே இரண்டு கலிப்ர் ஏவுகணைகள் ஒடேசா துறைமுகத்தை தாக்கியதாக உக்ரைன் இராணுவத்தின் தெற்கு கட்டளை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் இரண்டு ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. தாக்குதல் துறைமுகத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா மோசமாக்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த தாக்குதல் ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் உறுதிப்பாட்டின் நம்பகத்தன்மையின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றார்.

ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் மற்றும் அது ஒப்புக்கொண்ட தானிய ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், என்று அவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார.

கிரெம்ளின் இதுவரை இந்த தாக்குதல் குறித்து பகிரங்கமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை இடைத்தரகர் செய்த துருக்கிய அரசாங்கம், ரஷ்ய அதிகாரிகள் பொறுப்பை மறுத்ததாகக் கூறியது.

ரஷ்யாவுடனான எங்கள் தொடர்பில், ரஷ்யர்கள் எங்களிடம் இந்த தாக்குதலுக்கும் முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் பிரச்சினையை மிக நெருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தனர் என்று பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசாய் அகர் கூறினார்.