எதிர்காலத்தில் மாகாண ஆளுநர்களை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாண ஆளுநர் பதவி ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநர் பதவியை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே, தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த போதிலும், தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய ஆளுநர்கள் பலர் எதிர்வரும் காலங்களில் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணைந்திருங்கள்