தேயிலைக் கொழுந்தின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

கடந்த மாதங்களில் ஒரு கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 100 ரூபாவிற்கும் 130 ரூபாவிற்கும் இடையில் காணப்பட்டதாக சபையின் தலைவர் துஷார பிரியதர்ஷன குறிப்பிட்டார்.

எனினும், ஒரு கிலோ பச்சை தேயிலைக் கொழுந்தின் விலை தற்போது 260 ரூபாவை விட அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

டொலரின் பெறுமதி அதிகரித்ததன் பலன் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.