இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரணிலுடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையிலேயே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.