15 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட, பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞன் ஒருவரையும் குறித்த சிறுமியையும் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட, பிரான்ஸில் வசித்து வந்த இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த இளைஞன் 15 வயதுக் காதலியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாயிருந்தார்.