பிரித்தானியாவில் பிரபல டிக்டாக் நட்சத்திரம் ஒருவர், தமது தாயாரின் அந்தரங்க காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்து வந்த அவரது காதலரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் சிக்கியுள்ளார். பிரித்தானியாவில் டிக்டாக் நட்சத்திரமாக வலம் வருபவர் 23 வயதான மெஹக் புகாரி. இவரே தமது 45 வயது தாயார் அன்ஸ்ரீன் புகாரியின் அந்தரங்க காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துவந்த 21 வயது இளைஞர் சாகிப் உசேன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் சிக்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 11ம் திகதி நள்ளிரவு கடந்த நிலையில், சாகிப் மற்றும் அவரது நண்பர் முகமது ஹாஷிம் ஆகிய இருவரும் சென்ற கார் விபத்தில் சிக்கி, நெருப்பு கோளமாக மாறியது. இதில் இருவருமே சம்பவயிடத்தில் கொல்லப்பட்டனர்.
தற்போது இந்த விபத்தின் பின்னணியில் மெஹாக் புகாரியின் சதி எனவும், அன்ஸ்ரீன் புகாரியின் அந்தரங்க காட்சிகளை அவரது கணவர் மற்றும் மகனுக்கு அனுப்புவதாக சாகிப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தொடர்புடைய அந்தரங்க காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க அன்ஸ்ரீன் புகாரியிடம் 3,000 பவுண்டுகள் வரையில் கேட்டு சாகிப் மிரட்டல் விடுத்துள்ளார். சாகிப் உசைன் தொடர்புடைய காட்சிகளை வெளியிட நேர்ந்தால், தமது குடும்பம் மட்டுமின்றி, தமது சமூக ஊடக வாழ்க்கையும் சீர்கெடும் என மெஹாக் அஞ்சியுள்ளார்.
விபத்துக்கு முன்னர் மிகுந்த அச்சத்தின் நடுவே சாகிப் 999 இலக்கத்தை தொடர்பு கொண்டு, தமது வாகனத்தை சில பேர் இரண்டு வாகனங்களில் துரத்துவதாகவும், அவர்களிடம் இருந்து தப்பும் முயற்சியில் இருப்பதாகவும், அவர்கள் தம்மை கொல்ல வந்தவர்கள் என அஞ்சுவதாகவும், உதவ முன்வர வேண்டும் எனவும் கெஞ்சியுள்ளார்.
ஆனால் அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மெஹாக் மீது இரு பிரிவுகளில் கொலை வழக்கும் அவரது தாயார் அன்ஸ்ரீன் புகாரி மற்றும் தோழி நடாஷா அக்தர் ஆகிய 6 பேர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
45 வயதான அன்ஸ்ரீன் புகாரி 21 வயது இளைஞர் சாகிப் உசேன் என்பவருடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் அன்ஸ்ரீன் புகாரி உறவை முறித்துக் கொள்ள, இருவரும் தனிமையில் இருந்தபோது பதிவு செய்த அந்தரங்க காட்சிகளை வெளியிட இருப்பதாக சாகிப் மிரட்டியுள்ளார்.
இதுவே, கொலையில் முடிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 2021 ஆகஸ்டு மாதம் 10ம் திகதி முதல் 2022 பிப்ரவரி 9ம் திகதி வரையில் அன்ஸ்ரீன் புகாரியை 1,702 முறை சாகிப் தொடர்பு கொண்டதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆனால், இந்த காலகட்டத்தில் அன்ஸ்ரீன் புகாரி 214 முறை மட்டுமே சாகிபை தொடர்பு கொண்டுள்ளார். இதில் இருந்தே இருவரும் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளது நிரூபணமாகியுள்ளதாகவும், அவர்களின் உரையாடல்களில் இருவரும் உடல் ரீதியான உறவிலும் இருந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இணைந்திருங்கள்