பொதுவாக பழங்கள் என்று எடுத்துக் கொண்டாலே ஆரோக்கியத்தை அதிகமாக பெற்றுக் கொள்வதுடன் உடல் பிரச்சினை எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு செல்லாமலே மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்த அளவிற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளில் சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது. அனைத்து பழங்களிலும் பல விதமான விட்டமின்கள் காணப்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கவும் செய்கின்றது. அந்த வகையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தின் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் காணப்படுகின்றது.

இத்துடன் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.

வெறும் 5 பழங்களில் 250மிலி அளவு பழச்சாறு தயாரித்து குடித்தால் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன.

இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

மேலும் அழகு சாதனப்பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் வடுக்கள் இவற்றினை சரி செய்வதற்கு பெரிதும் உதவி செய்கின்றது.

பற்களில் ஏற்படும் கரைகளை போக்குவதில் ஸ்ட்ராபெர்ரியின் பங்கு முழுமையாக இருக்கின்றதாம். இரண்டாக வெட்டி பற்களில் தேய்த்தால் பல் பளிச்சென்று ஆகிவிடுமாம்.

சருமத்தை பாதுகாக்கும் இந்த பழம் ஜீரண சக்தியை சரிசெய்வதுடன், கெட்ட கொழுப்பு சேராமல் பாதுகாக்கின்றது.

தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் ரத்த ஓட்டத்தினை சீராக வைக்கின்றது.

ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழத்தினால் சருமம் வயதாகாமல் இளமையாக தோற்றமளிப்பதுடன், நீர் சத்தை ஈடு செய்து செல் அழிவையும் தடுக்கின்றது.

நார்ச்சத்துகள் அதிகம் கொண்ட இந்த பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவது மிக மிக குறைவாம்.

மேலும் தலைமுடியினை பாதுகாபபதுடன், கண் பார்வையையும் நலமாக இருக்க உதவி செய்கின்றது.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் இந்த பழத்தினை ஆண்கள் சாப்பிட்டால் விந்தணுக்கள் குறைபாடு பிரச்சினை வராமல் தடுக்க முடியும்.

இந்த பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கால்சியம் சத்தும் அதிகமாக கிடைப்பதால் எலும்பு தேய்மான பிரச்சினை எதுவும் வராமல் எலும்புகளை பாதுகாக்கின்றது.