”வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை” என்ற வசனத்துக்கு ஓர் உதாரணம் தான் ஐஸ்வர்யா ராய் பச்சன். 1994ம் ஆண்டு உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டு இன்று வரை ரசிகர்களை கிரங்கடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். 49 வயதானாலும் இன்னும் வசீகரிக்கும் அழகுடன் வலம்வரும் ஐஸ்வர்யா ராய் இன்றைய தலைமுறையினருக்கு பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டு. இவ்வளவு அழகையும் பல ஆண்டுகளாக பாதுகாத்து வருவதற்கு என்னதான் செய்கிறார் என்றெல்லாம் பலரது மனதிலும் கேள்வி எழாமல் இல்லை, அவர்களுக்கான பதில் தான் இந்த பதிவு,

தண்ணீர்: திரைப்பிரபலங்கள் முதல் உலக நட்சத்திரங்கள் வரை அழகுக் குறிப்புகளில் முக்கியம் இடம்பிடித்தது தண்ணீர் அருந்துவது, ஒருநாளைக்கு குறைந்த 8 டம்ளர் அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

முக அழகுக்கு: யோகர்ட்டை முக அழகுக்கு பயன்படுத்துவாராம் ஐஸ்வர்யா, இதுதவிர அப்போதே தயாரிக்கப்பட்ட வெள்ளரிக்காய் மாஸ்கும், வெள்ளரிக்காயுடன், ரோஸ் வாட்டர், காய்ச்சாத பால் கொண்டு தயாரிக்கப்படும் மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு, இதுதவிர மிக முக்கியமான பொருள் கடலை மாவு, அடிக்கடி முகத்தை கழுவிக்கொள்வதும் ஐஸ்வர்யாவின் வழக்கமான பழக்கங்களில் ஒன்று.

வீட்டு உணவுக்கு முக்கியத்துவம்: படப்பிடிப்புகளில் கலந்து கொண்டாலும் ஐஸ்வர்யா விரும்பி சாப்பிடுவது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே, ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் ஒருபோதும் சாப்பிட மாட்டார்.

இதேபோல் ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களும் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காத ஒன்று.

மிக முக்கியமாக மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே வாழ்க்கை அழகாக இருக்கும் என்பதில் நம்பிக்கையுடையவர் ஐஸ்வர்யா ராய்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்: நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தான் நம் அழகில் பிரதிபலிக்கும் என்பதில் உறுதியானர் ஐஸ்வர்யா.

தினசரி உணவில் அதிகளவு பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்வதால் முகமும், தோலும் மினுமினுக்கும், நமக்கு தேவையான விட்டமின்களும், தாதுக்களும், ஆன்டி ஆக்சிடன்டுகளும் உணவிலிருந்து கிடைக்கப்பெறுவதால் அழகாகவும், அதேசமயம் ஆரோக்கியமாகவும் ஜொலிக்கலாம்.

முடி பராமரிப்பு: அடர்த்தியான, நீளமான முடிக்கு தவறாமல் எண்ணெய் வைப்பது அவசியம், ஐஸ்வர்யா ராய் அதை ஒருபோதும் தவறவிடுவதில்லை, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்வாராம், இதுதவிர முட்டையுடன் ஆலிவ் ஆயில், பாலுடன் தேன் போன்ற முடிக்கு தேவையான மசாஜ்களும் செய்து கொள்வாராம்.