மனிதர்களாகிய நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் என்பது முக்கியமானதாக இருக்கின்றது. நாம் இரவில் சரியாக தூங்கி எழுந்தால் மட்டுமே மறுநாள் சுறுப்புடன் பகலில் வேலை செய்ய முடியும். ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கும் பிரச்சினையாக இருக்கின்றது தூக்கம். இதற்கு முக்கிய காரம் உழைப்பு இல்லாமல் இருப்பது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மட்டுமே.
ஆம் சில குறி்ப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொண்டு இரவில் நீங்கள் நித்திரைக்கு சென்றால் தூக்கம் தடைபடாது. அதுவே உறக்கத்தை தடைசெய்யும் உணவுகளை எடுத்துக் கொண்டால் தூக்கம் வராமல் அவஸ்தை பட வேண்டியுள்ளது.
இங்கு தூக்கத்தை கெடுக்கும் உணவுகள் என்ன என்பதையும், அதனை ஏன் இரவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்
- இரவு நேரத்தில் தேநீர், காஃபி, சாக்லேட், சோடா, சாக்லேட் மில்க் இவற்றினை பருகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோடா போன்ற பானங்களில் கோஃபைன் உள்ளதால் இவை மூளையை பாதிப்பதுடன், தூக்கமும் தடைபடும்.
- இரவில் கொழுப்பு உணவுகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் நெய் வெண்ணெய் இவற்றினையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படும்.
- மைதா போன்ற உணவுகளை இரவில் சாப்பிட வேண்டாம். நூடுல்ஸ், பாஸ்தா இவற்றினை இரவில் எடுத்துக் கொண்டால் தூக்கம் பாதிக்கப்படுவதுடன், செரிமான பிரச்சினையும் ஏற்படும். இவை தொடர்ந்தால் உடம்பில் பாரிய பிரச்சினையில் கொண்டு சென்றுவிடும்.
- ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை தூக்கத்தில் பிரச்சினை ஏற்படும். குறிப்பாக வைட்டமின் கே, கால்சியம் , இரும்பு, வைட்டமின் டி , மக்னீசியம் போன்ற சத்துக்களை தவறாமல் எடுத்துக்கொண்டால் தூக்க பிரச்சினை வராது.
- இரவு உணவு சாப்பிட்ட பின்பு உடனே உறங்க செல்லக்கூடாது. சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் கழித்தே தூங்க செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்க சென்றால் அது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துமாம்.
இணைந்திருங்கள்