அநுராதபுரம், கஹடகஸ்திகிலிய பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவியொருவர் பலியாகியுள்ளார்.

பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் கலைபீடத்தில் மூன்றாம் வருட மாணவியான நஹாதீயா (25வயது) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவியின் கணவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.