உயிரைப் பறிக்கும் மரபியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கனேடிய குழந்தை ஒன்று முதல் முறை முன்னெடுக்கப்பட்ட சிகிச்சையால் குணமடைந்து அறிவியல் உலகமே கொண்டாட வைத்துள்ளது. ஒட்டாவாவில் வசிக்கும் ஜாஹித் பஷீர் மற்றும் சோபியா குரேஷி தம்பதியின் அய்லா என்ற 16 மாத குழந்தையை தான் அறிவியல் உலகமே கொண்டாடுகிறது.
கருவில் இருக்கும் போதே குழந்தை அய்லா பாம்பே நோய் தாக்குதலுக்கு இலக்கானார். பரம்பரை வியாதியான இதனால் ஏற்கனவே இரு சகோதரிகளை பறிகொடுத்துள்ளார். இந்த நிலையில் 2021ல் முதன் முறையாக சோதனை முயற்சியாக கருவில் இருக்கும் போதே குழந்தை அய்லாவுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், வியக்கும் வகையில், குழந்தை அய்லா குணமடைந்துள்ளதுடன், நலம் பெற்று வருவதாகவும் குடும்பத்தினரும் மருத்துவர்களும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, இதுபோன்ற மரபியல் நோய்க்கு உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் போதே சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளதை அறிவியல் உலகம் கொண்டாடியுள்ளது.
பாம்பே நோயில் காணப்படாத ஒரு நொதியை ஒட்டாவா மருத்துவமனை மற்றும் கிழக்கு ஒன்ராறியோவின் குழந்தைகள் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற சிகிச்சைகள் குழந்தை பிறந்த பின்னர் அல்லது, வளர்ந்த பின்னர் முன்னெடுக்கப்படும். ஆனால் குழந்தை அய்லா விடயத்தில் அவரது தாயார் கருவுற்றிருந்த 24வது வாரம் 37வது வாரத்தில் குறித்த சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கனேடிய மருத்துவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த நோய் அரிதானது மட்டுமின்றி, 100,000 குழந்தைகளில் ஒருவருக்கும் குறைவாகவே காணப்படுகிறது, இருப்பினும் சில இனப் பின்னணியில் இது மிகவும் பொதுவாக காணப்படுகிறது.
இணைந்திருங்கள்