மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தலால் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் இத்தடை உத்தரவு இன்று மும்பை போலீசாரால் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 12 வரை நடைமுறையில் இருக்கும்.

இது தொடர்பாக மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில் “விஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவும் பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோத சக்திகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும்.

இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக 30 தினங்களுக்கு பிரஹன் மும்பை போலீஸ் கமிஷனரேட் பகுதியின் அதிகார வரம்பிலுள்ள பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் வாயிலாக இயங்கக்கூடிய (அ) மைக்ரோ-லைட்(இலகுரக) விமானம், பலூன்கள், தனியார் ஹெலிகாப்டர்கள் போன்றவை பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.