யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் 83 ஆம் அணியின் ஆதரவில் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்றையதினம் (09) யாழ். போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. கட்டடத்தை பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி மாஸ்டர் திறந்து வைத்தார். நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. Gnanaponraj உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் யாழ். பரியோவான் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஈகிள் கெயர் ரிறஸ்ட் அமைப்பானது, இலங்கையில் உள்ள மக்கள் மற்றும் வைத்தியசாலைகளின் தேவைகளை அறிந்து உதவி வருகின்றது. யாழ். பரியோவான் கல்லூரி 1983ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவானது, புதுப்பிக்கப்பட்டமையில் பகுதியளவில் தமது உதவியை இவ் அமைப்பு ஊடாக வழங்கியுள்ளனர். அத்துடன் இவ் அலகைப் பராமரிப்பதற்கும் தமது ஒப்புதலை வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.