ஒவ்வொரு தாய்க்கும் தனக்கு பிறக்க போகும் குழந்தையை ஆரோக்கியமாகவும்இ நல்ல உடல் எடையுடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்யும். பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமான உடல் எடையானது 2.75 ஆகும். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் குறைவான எடையுள்ள குழந்தை பிறக்கிறது.

இது மாறிவரும் நமது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு பிரச்சனையாகும். ஆய்வுகள் கருவில் உள்ள குழந்தையின் உடல் எடையை தரமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. மருத்துவர்களும் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என கூறுகின்றனர்.

எனவே கர்ப்பமாக உள்ள பெண்கள் ஆரோக்கியமான சத்தான உணவுகளை அதாவது உங்களுக்கும் குழந்தைக்கு சேர்த்து சாப்பிட வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் குழந்தையின் உடல் எடையை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

கருவில் உள்ள குழந்தையின் எடையை அல்ட்ரா ஸ்கேன் மூலமாக கணக்கிடலாம். இந்த ஸ்கேன் ஆனது கர்ப்ப காலத்தில் 3 முதல் 4 முறை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்படுகிறது. இந்த ஸ்கேன் மூலமாக கணக்கிடப்படும் குழந்தையின் எடையானது எப்போதும் 10ஃ- 10மூ ஆக இருக்காது.

வயிற்றில் வளரும் குழந்தையின் எடையானது குறைவாக இருந்தால் அதனை கவனமாக கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். குழந்தையின் எடை குறைவாக சில காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பது பற்றி காணலாம். 1. தாயின் எடை மிகவும் குறைவாக இருப்பது 2. மோசமான உணவு பழக்கம் 3.ஐருபுசு (ஐவெசயரவநசiநெ புசழறவா சுநளவசiஉவழைn) 4.ளுபுயு (ளுஅயடட கழச புநளவயவழையெட யுபந) 5. மரபு ரீதியான மாற்றம் 6. தாயின் வயது 7. தாயின் முந்தைய மருத்துவ நிலை

கருவில் உள்ள குழந்தையின் உடல் எடை ஒவ்வொரு பருவத்திலும் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது பற்றி காணலாம். 10- ஆவது வாரம்: 4 கிராம் 15-ஆவது வாரம்: 70 கிராம் 20-ஆவது வாரம்: 300 கிராம் 25-ஆவது வாரம்: 660 கிராம் 30-ஆவது வாரம்: 1.3 கிலோ கிராம் 35-ஆவது வாரம்: 2.4 கிலோ கிராம் 36-ஆவது வாரம்: 2.6 கிலோ கிராம் 37-ஆவது வாரம்: 2.9 கிலோ கிராம் 38-ஆவது வாரம்: 3.1 கிலோ கிராம் 39-ஆவது வாரம்: 3.3 கிலோ கிராம் 40-ஆவது வாரம்: 3.5 கிலோ கிராம்

இந்த அட்டவணையானது உங்களது கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமானதாக உள்ளதா என்பதை கண்டறிய உதவும். மேலும் குழந்தை உடல் எடை குறைவாக இருப்பது என்பது ஆரோக்கியமற்ற குழந்தை என்பதற்கான அர்த்தம் கிடையாது. எடை குறைவாக உள்ள குழந்தைகள் கூட எடை அதிகமாக உள்ள குழந்தைகளை விட ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே நீங்கள் பதற்றமடைய வேண்டாம். ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு மாதிரி என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களது குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்க உங்களது மோசமான உணவு முறை தான் காரணமாக இருக்கும் என்றால் நீங்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

புரோட்டின் உணவுகள் ஆரோக்கியமான குழந்தையின் உடல் எடைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. நீங்கள் அதற்காக அதிகமாக கார்போஹைட்ரைட் உள்ள உணவுகள்இ கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது. கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணின் தினசரி புரோட்டின் உட்க்கொள்ளல் அளவானதுஇ 80 கிராம் ஆகும். ஆனால் மருத்துவதுறையில் உள்ள சிலர் இது அதிகமான அளவு என்று கூறுகின்றனர். இதனால் குழந்தை குண்டாக பிறக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

முட்டை
மற்ற உணவுகளை விட முட்டையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. கூடுதலாக இதில் போலிக் ஆசிட்இ கோலின் மற்றும் இரும்புசத்து உள்ளது. தினமும் இரு வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தாலே கர்ப்பிணி பெண்களுக்கு போதுமானது.

உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்
ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க போதிய அளவு காய்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும். பல மருத்துவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களை நட்ஸ் சாப்பிட வேண்டும் என கூறுகின்றனர். இந்த நட்ஸ்களில் பேரிச்சைஇ கருப்பு திராட்சைஇ அத்திப்பழம் போன்றவை அடங்கும். இவற்றை மாலை நேர ஸ்நேக்ஸ் ஆக ஒரு கைப்பிடி அளவு சாப்பிட வேண்டும்.

யுனஎநசவளைநஅநவெ

பால்
கர்ப்பிணி பெண்கள் தினசரி குறைந்தது 2 டம்ளர் அளவு பால் ஆவது குடிக்க வேண்டியது அவசியமாகும். எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பால் ஒரு புரோட்டின் ஆதாரமாக உள்ளது. தினசரி 200-500 மிலி பால் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

யோகார்ட்
யோகார்ட் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதை தடுக்க உதவுகின்றன. மேலும் இந்த யோகார்ட்டில் போதுமான அளவு புரோட்டின் உள்ளது. பாலை விட அதிகளவு கால்சியம் இந்த யோகார்ட்டில் உள்ளது. விட்டமின் பி காம்ளக்ஸ் மற்றும் ஜிங்க் உள்ளது.

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் விட்டமின் ஏஇ விட்டமின் சிஇ இரும்புச்சத்துஇ மெக்னீசியம் ஆகியவை உள்ளது. விட்டமின் ஏ ஆனது கண்பார்வைக்கு மிகவும் சிறந்ததாகும். இது குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் இது குழந்தை ஆரோக்கியமான உடல் எடையை பெறவும் உதவுகிறது.

முழுதானிய உணவுகள்
கண்டிப்பாக மைதாஇ சோள மாவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள கூடாது. முழு தானிய உணவுகளான கம்புஇ பிரவுன் ரைஸ் போன்றவற்றை கட்டாயமாக்குங்கள். இவற்றில் புரோட்டின்இ இரும்புச்சத்துஇ மெக்னீசியம்இ கார்போஹைர்ரைடுகள்இ நார்ச்சத்துகள் போன்றவை உள்ளன. இதனை குறைந்தது தினமும் இரண்டு முறையாவது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

மீன்
மீன் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும். இதில் கணிசமான அளவு ஒமேகா-3 உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிகமாக மெர்குரி இருக்கும் மீன்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கருவின் ஆரோக்கியத்திற்கு மீன் உதவியாக இருக்கும்

பருப்பு வகைகள்
பருப்பு வகைகளை உணவில் கர்ப்பிணி பெண்கள் தினசரி இரண்டு தடவைகளாகவது சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சோயா பீன்ஸ்இ பட்டாணி போன்றவற்றில் புரோட்டின் அதிகளவில் உள்ளது எனவே இவற்றை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.-