நாட்டின் தலைநகர் டெல்லியில் திலக் நகர் பகுதியானது அனைத்து தரப்பு மக்களும் வசித்து வரும் பகுதியாகும். இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்திற்கு கடந்த 10-ந்தேதி அரசு சாரா அமைப்பு ஒன்றிடம் இருந்து தகவல் ஒன்று சென்றுள்ளது. அதில், வேலை வாங்கி தருகிறோம் என்ற பெயரில் நைஜீரியாவில் இருந்து 20 வயது இளம்பெண்ணை சட்டவிரோத கும்பல் கடத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடையாளம் தெரியாத கும்பலால் அந்த இளம்பெண் கடத்தப்பட்டு உள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து டெல்லி மகளிர் ஆணைய குழு, டெல்லி போலீசார் மற்றும் என்.ஜி.ஓ. ஆகியோர் அடங்கிய குழு சம்பவ பகுதிக்கு சென்று இளம்பெண்ணை மீட்டுள்ளது. அந்த சிறுமியின் பாஸ்போர்ட்டை கடத்தல் கும்பல் முடக்கி வைத்து உள்ளது.

இதுபோன்று ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விபசார தொழிலுக்காக இளம்பெண்கள் பலர் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளது என 20 வயது சிறுமி டெல்லி மகளிர் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளார். இதனை டெல்லி போலீசாரிடம் தெரிவித்து உள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவி, இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விளக்க அறிக்கை ஒன்றையும் டெல்லி போலீசாரிடம் கேட்டு உள்ளார்.

இளம்பெண்ணின் ஆவணங்கள் மற்றும் கடத்தல் கும்பலிடம் சிக்கிய மற்ற இளம்பெண்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்கும்படி டெல்லி போலீசாரிடம் அவர் கேட்டு உள்ளார்.நாட்டின் தலைநகர் டெல்லியில் திலக் நகர் பகுதியானது அனைத்து தரப்பு மக்களும் வசித்து வரும் பகுதியாகும். இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்திற்கு கடந்த 10-ந்தேதி அரசு சாரா அமைப்பு ஒன்றிடம் இருந்து தகவல் ஒன்று சென்றுள்ளது. அதில், வேலை வாங்கி தருகிறோம் என்ற பெயரில் நைஜீரியாவில் இருந்து 20 வயது இளம்பெண்ணை சட்டவிரோத கும்பல் கடத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடையாளம் தெரியாத கும்பலால் அந்த இளம்பெண் கடத்தப்பட்டு உள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து டெல்லி மகளிர் ஆணைய குழு, டெல்லி போலீசார் மற்றும் என்.ஜி.ஓ. ஆகியோர் அடங்கிய குழு சம்பவ பகுதிக்கு சென்று இளம்பெண்ணை மீட்டுள்ளது. அந்த சிறுமியின் பாஸ்போர்ட்டை கடத்தல் கும்பல் முடக்கி வைத்து உள்ளது.

இதுபோன்று ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விபசார தொழிலுக்காக இளம்பெண்கள் பலர் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளது என 20 வயது சிறுமி டெல்லி மகளிர் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளார். இதனை டெல்லி போலீசாரிடம் தெரிவித்து உள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவி, இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விளக்க அறிக்கை ஒன்றையும் டெல்லி போலீசாரிடம் கேட்டு உள்ளார்.

இளம்பெண்ணின் ஆவணங்கள் மற்றும் கடத்தல் கும்பலிடம் சிக்கிய மற்ற இளம்பெண்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்கும்படி டெல்லி போலீசாரிடம் அவர் கேட்டு உள்ளார்.