ஜி20 உச்சிமாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இவ்விருவரும் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விபரங்கள் ஊடகங்களில் கசிந்தமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோஐவு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் திட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘நாம் கலந்துரையாடும் அனைத்து விடயங்களும் பத்திரிகைகளுக்கு கசிகின்றன. அது பொருத்தமானதல்ல’ என மொழிபெயர்ப்பாளர் ஊடாக, கனேடிய பிரதமர் ட்ரூடோவிடம் சீனா ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார்.
அத்துடன் நேர்மை இருந்தால் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நாம் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம். இலாவிடின் பெறுபேறுகள் எதிர்வுகூறப்பட முடியாதவையாக இருக்கும’ என ட்ரூடோவை நேராக பார்த்து ஸீ ஜின்பிங் கூறினார்.
அதன்பின் ட்ரூடோவை கடந்து செல்ல ஸீ ஜின்பிங் முற்பட்டபோது , சீன ஜனாதிபதிக்கு பதிலளித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘கனடாவில் நாம் சுதந்திரமான, பகிரங்க, வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதை நாம் தொடர்வோம்’ என்றார்.
அப்போது தனது கைகளை உயர்த்திய ஸீ ஜின்பிங், ‘சூழ்நிலையை ஏற்படுத்துங்கள் என சிரித்தவாறு ட்ரூடோவுக்கு கைகொடுத்த ஸீ ஜின்பிங் தனது அறையை நோக்கிச் சென்றார்.
அதேவேளை இவர்கள் இருவருக்கும் இடையிலான மேற்படி உரையாடல் படம்பிடிக்கப்படுவதை சீன ஜனாதிபதி அறிந்திருந்தனரா என்பது தெரியவில்லை.
இணைந்திருங்கள்