தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், கிராமிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட கடும் தர்க்கத்தின் போது பரஸ்பரமாக இருவரும் குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்களை சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக நீக்குமாறு உத்தரவிட்டார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

வரவு -செலவுத் திட்ட விவாதத்தின் போது சபையில் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீது முன் வைத்த பல மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தனது உரையில் பதில் வழங்கியதுடன் இரா. சாணக்கியன் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கிய நிலையிலேயே சுமந்திரன் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார் .

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவ்வேளை சபையில் இல்லாத நிலையில் அவர் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாதென சுமந்திரன். ஒழுங்குப்பிரச்சினை எழுப்பியதனையடுத்தே இருவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.

எனினும் சாணக்கியன் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த நிலையில் மீண்டும் எழுந்த சுமந்திரன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்ப்புத்தெரிவித்ததுடன் அதனை சபைக்கு தலைமை தாங்கிய பிரேம்நாத் சி தொலவத்தவின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் இராஜானகி அமைச்சர் சந்திரகாந்தன் மீது குற்றச்சாட்டொன்றை முன் வைத்தார். இதனையடுத்தே இருவரின் கருத்துக்களையும் ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு சபைக்கு தலைமை தாங்கிய பிரேம்நாத் சி. தொலவத்த உத்தரவிட்டார்.