தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

கேகாலையில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் தெரிவித்தார். தகவல் அறியும் சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது கவலையளிக்கின்றது.

அதேநேரம், கூட்டணியொன்றை முன்னெடுத்து செல்வது அதனை ஏற்படுத்தியவர்களிடத்திலேயே பொறுப்புள்ளது.

அதனை சரிவர நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டணி பிளவுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.