முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய சகலரின் கட்சி உறுப்புரிமையையும் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை நீக்குவதற்கும் கட்சியின் செயற்குழு தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இதனைத் தீர்மானித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய சகலரின் கட்சி உறுப்புரிமையையும் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை நீக்குவதற்கும் கட்சியின் செயற்குழு தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இதனைத் தீர்மானித்துள்ளது.
இணைந்திருங்கள்