ஈரானின் அணுசக்தி விரிவாக்கத் திட்டங்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு புதிதாக அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத உருவாக்கம் ஆகியவற்றை கண்கானிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை அணுசக்தி கண்காணிப்பகம் ஒன்றை அமைத்து நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக மேலும் இரண்டு ஆலைகளில் செறிவூட்டலை விரிவுபடுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வருவதாக ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகம் சமீபத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் குறித்து ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் செவ்வாயன்று ஈரானின் அணுசக்தி விரிவுபடுத்தும் திட்டங்களை கண்டித்துள்ளன.

இது தொடர்பாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் பிரித்தானியா வழங்கிய கூட்டு கண்டன அறிக்கையில், ஈரானின் நடவடிக்கையானது உலகளாவிய பரவல் தடை அமைப்புக்கு ஒரு சவாலாக உள்ளது, மேலும் கணிசமான பெருக்கம் தொடர்பான அபாயங்களை கொண்ட இந்த நடவடிக்கைக்கும் நம்பமான சிவிலியன் நியாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஈரானின் தொடர்ச்சியான அணுசக்தி அதிகரிப்புக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து சர்வதேச பங்காளிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளோம் என்றும் அந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.