கனடாவின் பிராம்டன் நகரில் பட்டாசு மற்றும் வான வேடிக்கை என்பன விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது பிரம்டன் நகர சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பன இந்த புதிய நடைமுறையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை தடை குறித்த தீர்மானம் ஏக மனதாக நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தங்களது தனிப்பட்ட வீடுகளில் பட்டாசு கொளுத்துவதற்கு ஏற்கனவே பிரம்டனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு, தீபாவளி, கனடா தினம் மற்றும் விக்டோரியா தினம் ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே இவ்வாறு பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தை மதிக்க தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பட்டாசு கொளுத்தினால் 350 முதல் 500 டாலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் பட்டாசு விற்பனை செய்தால் 350 முதல் 1000 டாலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட நிகழ்வுகள் மற்றும் நகர நிகழ்வுகளுக்கு இந்த தடை உத்தரவில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்