கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாமானிய டி எஸ் சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவராக கட்சியின்
தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். .!
———————————————————————

(கலாநிதி ஜனகன் ஊடகப் பிரிவு)

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் இளையஞர்களுக்கு அரசியல் கல்வியினை வழங்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் மாமானிய டி எஸ் சேனநாயக்க அரசியல் கல்வி நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தில் செயற்படும் என்று கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நாடுபூராகவும் விஷ்தரிக்கப்படும் என சஜித் பிரேமதாச அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

கலாநிதி ஜனகன் அவர்களின் இரண்டு தசாப்தகாலங்களுக்கு மேலன கல்வித்துறை ரீதியான பங்களிப்பும் அனுபவமும் இந்த கல்வி நிறுவனத்தை நிர்வகிக்க மிக உறுதுணையாக இருக்கும் என் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்,கௌரவ பாராளுமான்ற உறுப்பினருமான மத்தும பண்டார அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற கௌரவ உறுப்பினருமான புத்திக்க பத்திரன அவர்களும் கலந்துகொண்டார்கள்.
புத்திக்க பத்திரன அவர்கள் குறிப்பிடும் போது, இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நேரடி வகுப்புகளுக்கு மேலதிகமாக online மூலமும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த கல்விநிறுவனத்தின் செயற்பாடுகள் கலாநிதி ஜனகன் அவர்களின் வழிநடத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்களும் பயன் அடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என குறிப்பிட்டார்.