” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்படுவேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதற்கு முன்னர், சுதந்திரமாக கருத்துகோரப்பட வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. கட்சி உறுப்பினரை இடைநிறுத்தும் நடைமுறைகூட தற்போது கட்சியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை.
இடைநிறுத்தம் பற்றி எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு செய்தால்கூட எனக்கு பரவாயில்லை. ஏனெனில் மாற்று தரப்பிடம் கட்சி பெயர் பலகை மட்டுமே உள்ளது. மக்கள் சக்தி எம்பக்கம் உள்ளது.
மைத்திரிபால சிறிசேனவும், தயாசிறியும் கட்சியை ராஜபக்சக்களிடம் ஒப்படைக்க திட்டம் தீட்டுகின்றனர்.” – எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.
இணைந்திருங்கள்